இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ஆகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு ஓய்வை அறிவித்திருக்கிறார் கோலி.
விராட் கோலி பேசுகையில், "இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை. இதுதான் இந்தியாவுக்காக என்னுடைய கடைசி டி20 ஆட்டம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன். இன்று கோப்பையை ஏந்த நினைத்தேன். இறைவன் மிகப் பெரியவர். அணிக்கு மிகவும் தேவைப்படும் ஒரு நாளில் என்னால் ரன்கள் அடிக்க முடிந்தது. அடுத்த தலைமுறையில் அற்புதமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிப்பார்கள் என்றார்.
No comments