Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்திற்கு மோடி தலைமையேற்க வேண்டும்.


பாரத தேசத்தை பொறுப்பேற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தலைமையேற்று முழுமையாக பங்காற்ற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டதால் அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக வலுப்பெற்று பின்னர் இந்தியா இலங்கை ஒப்பந்தத்துடன் இலங்கை தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு வந்தது

இருந்தும் துரதிஸ்டமாக வன்முறைகள் தொடர்ந்தகொண்டிருந்தது. பின்னர் பன்னாட்டு சக்திகள் நாட்டின் உள் விவகாரங்களில் மத்தியஸ்தம் வகித்தும் பேரழிவுடன் வன்முறை அஸ்தமித்துப்போனது.

தமிழர்களுடைய அரசியல் உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வும் எட்டப்படவில்லை. ஆயினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை ஆட்சிமுறையே மிஞ்சியது. 

இருந்தும் காணி பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெறப்பட்ட நிலையிலும் இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி.யினர்  தமிழர்கள் ஒரு நிலத் தொடர் அலகாக வாழ்வதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்க தாக்கல் செய்து பின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

அவ்வாறாக இருந்த சூழலில் ஜனநாயக முறைப்படி மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. 

ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கமான முடிவின்றியே இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது முறையாக பாரத தேசத்தை பொறுப்பேற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தலைமையேற்று முழுமையாக பங்காற்ற வேண்டும்.  

இலங்கை தொடர்பான அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு நலன்சார்ந்து இந்தியாவே இருந்து வருகின்றது. இருப்பினும் புரையோடிப்போயுள்ள தமிழர்களது அரசியல் தீர்வு விடயத்தில் 1983 இனக்கலவரம் முதல் இன்றைய பொருளாதார நெருக்கடி வரையும் இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

அதேபோன்று தற்போது பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முழுமையாக பங்காற்ற வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments