Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தனது வீட்டில் நகைகளை திருடி காதலிக்கு அன்பளிப்பு வழங்க தயாரான இளைஞன் கைது


குருநாகலில் தனது தந்தையின் சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி காதலிக்கு செலவு செய்ய தயாரான இளைஞனையும் , இளைஞனின் காதலியின் தந்தையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்கு அன்பளிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காதலியின் தந்தையுடன் திருடிய நகைகளை அரச வங்கியில் அடகு வைப்பதற்காக சென்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த நகைகளை திருடிக்கொண்டு மகன் தப்பி சென்றதை அறிந்த தந்தை , மகனை தேடிய போது, திருடிய நகைகளை மகன் அடகு வைப்பதற்காக செல்வதாக  கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரின் உதவியுடன் மகனையும் , மகனின் காதலியின் தந்தையையும் மடக்கி பிடித்துள்ளார். 

அதன் போது, ​​அடகு வைக்கப்படவிருந்த 03 சங்கிலிகள், 04 மோதிரங்கள், 03 பென்டன்ட்கள், ஒரு கைச் சங்கிலி மற்றும் இரண்டு ஜோடி காதணிகள் ஆகியவற்றைக் பொலிஸார் மீட்டுள்ளனர். 

நகைகளை அடகு வைத்து அதில் வரும் பணத்தினை கொண்டு  தன் காதலிக்கு பரிசுகள் வாங்க இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். 

அதேவேளை வீட்டில் இருந்து திருடப்பட்ட 58 ஆயிரம் ரூபாய் பணத்தில் ஐந்நூறு ரூபாய்க்கும் குறைவாகவே வைத்திருந்துள்ளார்.

திருடிய பணத்தினை செலவழித்து காதலிக்கு ஒரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மற்றும் இரண்டு பவர் பேங்க் வாங்கிக் கொடுத்துள்ளார்.

23 வயதான குறித்த சந்தேக நபர் மூன்று வன்முறை குற்றங்களுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments