கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளரை தவிர துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வாகனங்களை வழங்கியவர்களும் கொலைக்கு உதவியவர்களும் மற்ற சந்தேக நபர்களாவர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அவ்வப்போது 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
No comments