வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான ஊர்வலம் நடைபெறவுள்ளதுடன், 21ஆம் திகதி இறுதிப் பெருவிழா நடைபெறவுள்ளது. பின், 22ம் திகதி காலை, மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்தையடுத்து , உற்சவம் இனிதே நிறைவடையும்.
திருவிழாக் காலங்களில் கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொது வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட ஆணையாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
No comments