தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை வளர்க்கும் நோக்குடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை யாழ் மாவட்ட ரீதியில் நடாத்திய மாபெரும் தாச்சி போட்டியின் இறுதிப் போட்டி இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் தாவடி காளியம்பாள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது .
தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை தலைவர் மயூரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இறுதிப் போட்டியில் சங்கானை கிங்ஸ் அணியை எதிர்த்து ஆனைகோட்டை சித்தி விநாயகர் அணி மோத உள்ளது .
அத்துடன் தாவடி காளியம்மாள் விளையாட்டுக்களக அணிகளுக்கு இடையிலான காட்சிப் போட்டியும் நடைபெற உள்ளது .
No comments