சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரை சோதனையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரை சோதனையிட்ட போது வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தவர், பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது துப்பாக்கி இயங்கியதில் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments