கற்பிட்டி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் ரக வண்டியை பொலிஸார் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு கரம்பை சோதனைச் சாவடியில் இடைமறித்து சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோது, 650 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றினை எடுத்து சென்றவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கையடக்க தொலைப்பேசிகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் கெக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
No comments