ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவுக்கு மேற்படாத தொகையை தேர்தல் பிரச்சார செலவினமாக செலவிட முடியும்.
இதற்கமைய வேட்பாளர் ஒருவர் 186 கோடி வரை செலவிட முடியும். தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் செலவினம் தொடர்பான விபரத் திரட்டு ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தி ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்தல் வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
No comments