புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தரித்துநின்ற நான்கு சொகுசு பஸ்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது
தீ வைத்து எரிக்கப்பட்ட நான்கு சொகுசு பஸ்களில் ஒன்று முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்த சி.சி.ரிவி கமராவை சோதனையிட்டு பார்த்த போது, இனந்தெரியாத நபரொருவரால் இந்த நான்கு சொகுசு பஸ்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால், சுமார் 3 கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments