Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் பாரிய விபத்து - நால்வர் உயிரிழப்பு


கிளிநொச்சி முரசுமோட்டையில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலையே நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சி – முல்லைத்தீவு  பிரதான வீதியில், முரசுமோட்டை பகுதியில், விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்ற பேருந்துடன்  நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உயிரிழந்தோர் கிளிநொச்சி விசுவமடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

.









No comments