யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் இன்றைய தினம் புதன்கிழமை தீப்பரவல் ஏற்பட்டது
குறித்த தீ விபத்துக்கான காரணம் தெரிய வராதநிலையில் பிரதேச சபை ஊழியர்களே குப்பைகளை வேண்டுமென்றே தீ மூட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேவேளை குறித்த குப்பை கிடங்கில் தொடர்ச்சியாக தீப்பரவல் ஏற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments