அலங்கார கந்தன் என போற்றப்படும் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நல்லூரன் செம்மணி வரவேற்பு அலங்கார வளைவில் சேவல் கொடி கட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இருந்து செம்மணி வீதி ஆரம்பிக்கும் இடத்தில் குறித்த வரவேற்பு வளைவு உள்ளது.
அதில் நாளைய கொடியேற்றத்தை முன்னிட்டு இன்றைய தினம் மதியம் 12 மணியளவில் சேவல் கொடி கட்டும் சம்பிரதாய நிகழ்வு இடம்பெற்றது.
No comments