லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் அராலித்துறையில் உள்ள கொப்பேகடுவவின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது டென்ஸில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயிரிழந்த முப்படையினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட முப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
1992 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அராலியில் இராணுவ வாகன தொடரணிக்கு மேற்கொண்ட குண்டு தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட பல இராணுவத்தினர் உயிரிழந்திருந்தனர்
No comments