Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" - நல்லூரில் கண்காட்சி


"நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" எனும் தொனி பொருளில் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி நல்லூர் ஆலய முன்றலில் உள்ள யாழ் மாநகர சபை தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும் இணைந்து இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். 

எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த கண்காட்சியில் நீர் சார்ந்த ஆய்வு விபரங்கள், விஞ்ஞான விளக்கங்கள், கலந்துரையாடல்கள், விளையாட்டுகள், இளையோர்கள் - சிறார்களுக்கான பரிசுப் போட்டிகள் என பலவகையான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 

நல்லூர் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் வடமாகாண நிலத்தடி நீர்வளத்தின்பால் கவனம் செலுத்தி குறித்த கண்காட்சியை பார்வையிட்டு நீர் சார்ந்த மேலும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளுமாறும் இதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 







No comments