யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும் திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன.
திரைப்படங்களை பார்வையிட வந்தவர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் நான்கு மாணவர்களுக்கும் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் , கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற திரையிடலை பார்வையிட காற்சட்டைகளுடன் வந்தவர்களை பல்கலை கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பல்கலை கழகத்தினுள் நுழைய அனுமதி மறுத்திருந்தனர்.
அதனால் திரைப்படத்தை பார்வையிட வந்தவர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு , அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமையால் , அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments