Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாவையும் , மகனும் வடிவேல் போல் செயற்படுகின்றார்கள்


தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலைஅமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு தம்பிராஜா தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

சஜித்துக்கு ஆதரவு என தமிழரசு கட்சி தீர்மானம் என கூறும் தலைவர் மாவை ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டுக்கு வந்தபோது நீங்கள் தான் ஐனாதிபதியாக வேண்டும் என்கிறார்.

அதன் பின் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தில் சஜித்துக்கு தமிழரசு ஆதரவு வழங்கியதில் மாற்றம் இல்லை எனக் கூறிவிட்டு வரும் வழியில் கிளிநொச்சியில் பொது வேட்பாளர் ஆதரவு மேடையில் ஏறினார்.

அவரது மகன் கலை அமுதன் யாழ் வந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் மறுநாள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்.

 யாருக்கு வாக்கு போட்டீர்கள் என கேட்டால் வடிவேல் பானில் இருவரும் வாக்கு சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என சொல்லு நிலையில் உள்ளார்கள். 

ஆகவே இவ்வாறானவர்களை  தமிழ் மக்கள் விரைவில் துரத்தி அடிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments