வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி . வி விக்னேஸ்வரனுக்கு இருந்த ஆதரவை கண்டு அஞ்சி ,2017ஆம் ஆண்டு நடக்க இருந்த வடமாகாண சபை தேர்தலை நடக்காது தடுத்ததில் தமிழரசு கட்சியின் பங்கும் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் , ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தல் நீண்ட காலமாக வைக்கப்படவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு வடமாகாண சபை தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை ? எல்லை நிர்ணயம் என்ற விடயத்தினை கொண்டு வந்தமையால் தேர்தல் நடைபெறவில்லை.
அந்த நேரம் வடமாகாண முதலமைச்சராக இருந்த சி . வி விக்னேஸ்வரனுக்கு பெருமளவான ஆதரவு இருந்தமையால் , தேர்தலை நடத்த கூடாது என்பதற்காக எல்லை நிர்ணய விடயத்திற்கு நாடாளுமன்றில் தமிழரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். அதனூடக தேர்தலை பிற்போட வைத்தார்கள்.
இலங்கை தமிழரசு கட்சியினர் தொடர்ந்து தமிழ் மக்களை பழி வாங்குகின்றார்கள். 2017ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்தாது இருக்க தமிழரசு கட்சியும் ஒரு காரணம். இன்றைக்கும் தமிழரசு கட்சியினர் பிளவு பட்டு மக்களை குழப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
No comments