உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி குறித்த தொகையை செலுத்தி முடித்துள்ளார்.
முழுத் தொகையையும் அவர் 8 தவணை முறைகளில் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி அவர் இந்தத் தொகையை செலுத்தி நிறைவு செய்துள்ளார்.
No comments