தூக்கத்தில் கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றி வரும் காத்தான்குடியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கட்டிலில் படுத்து உறங்கிய நிலையில் , தூக்கத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கைகையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






No comments