யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பிப்பதற்கு முன் டெங்கு பரவும் சூழலை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
No comments