Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கிராம சேவையாளரை இடமாற்ற வேண்டாம் என கோரி போராட்டம்


கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி யாழ்ப்பாணம், வரணி - நாவற்காடு பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.

நாவற்காடு - கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்தார். அவர் நாவற்காடு பிரதேசத்திற்கு கிராம அலுவலராக நியமனம் பெற்று 6 ஆறு மாதங்கள் பூர்த்தியாகாத நிலையில் அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி பிரதேச செயலரை சந்தித்திருந்தனர். எனினும் மக்களின் கோரிக்கைக்கு பிரதேச செயலரால் உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் பிரதேச மக்கள் இணைந்து  தீர்வு கோரி இன்றையதினம் நாவற்காடு பொதுமண்டபத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




No comments