Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் நடமாடிய இருவர் கைது


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவரை மட்டு தலைமையக பொலிஸார் கைது செய்தனர்.

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களே இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது, 

குருநாகலைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயை குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்ராசா வீதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தின போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து நோய் ஏற்பட்டவரும் அவருக்கு உதவியாக இருவருமாக குருநாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்று காலை மட்டக்களப்பை வந்தடைந்து குறித்த சீயோன் தேவாலயத்துக்கு செல்வதற்காக இடம் தெரியாது அந்தபகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்

இந்த நிலையில் இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிவருவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் அவசரசேவை இலக்கத்திற்கு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொலிஸார் அந்த இடத்துக்கு சென்று 35, 25 வயதுடைய இருவரையும் கைது செய்தனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரது கைவிரல் அடையாளம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments