Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீடுகளுக்கு சென்று டீசல் வியாபாரத்தில் ஈடுபட்டவர் 1200 லீட்டர் டீசலுடன் கைது


கேகாலை - அம்பேபுஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்று வந்த நடமாடும் வாகனம் ஒன்றும், அதன் ஓட்டுநரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை பிரிவு பொறுப்பு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்ட சிறப்பு காவல்துறை குழு இந்த சோதனையை நடத்தியது.

அந்த வாகனத்தின் பின்புறத்தில் சிறப்பு தொட்டி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததோடு, டீசலின் அளவை கணக்கிட மீட்டரும் நிறுவப்பட்டிருந்தது. 

மேலும் சந்தேக நபர், வாங்குபவர்கள் இருந்த இடத்திற்கே நேரடியாக சென்று, சாதாரண சந்தை விலையை விட ரூ.100 முதல் 150 வரை கூடுதலாக வசூலித்து டீசலை விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோதனையின்போது வாகனத்தில் 1200 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது வாகனமும் ஓட்டுநரும்  காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments