நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவருமான இனியவன் என அழைக்கப்படும் செந்திவேல் தமிழினியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வேட்பாளரின் மறைவிற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில்,
எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான எனது அன்புச் சகோதரன் செந்திவேல் தமிழினியன் (இனியவன்) அவர்களின் மறைவுச் செய்தியை கலங்கிய மனதுடன் அறியத்தருகிறேன்.
அன்னாரின் இழப்பு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இத்துயரத் தருணத்தில் நாம் அனைவரும் அன்னாரின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரோடும் துணைநிற்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறேன் என தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.
No comments