நபர் ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த குற்றவாளிக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி கொரட்டுஹேனகொட பிரதேசத்தில் சட்டவிரோத மின்சார கம்பியை இழுத்து நபரொருவரை வேண்டுமென்றே மின்சாரம் தாக்கி கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவரை குற்றவாளியாக கண்ட காலி மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
No comments