ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட யாழ் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ் தொகுதி அமைப்பாளர் ராஜீவ் தலைமையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதன்போது சக வேட்பாளர்களான கஜன், கிருபாகரன், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூக்கு கண்ணாடிச் சின்னத்தில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments