Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் மக்கள் இனங்காணும் தேர்தல் இது


சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்ப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கிருஸ்ணபிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரதேசங்களை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப வேண்டும் என்பது அவசியம். குறிப்பாக யாழ் மாவட்டத்தை இலங்கையின் அடுத்த பிரதான அந்நியச் செலாவணியை ஈட்டும் வர்த்தக பிராந்தியமாக கட்டமைக்க வேண்டும்.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளின் பின்னால் மக்கள் இம்முறை அணிதிரண்டு அவருக்கு அதிகப்படியான அரசியல் பலத்தை வழங்கினால் அது சாத்தியமாக்கப்படும் என நம்புகின்றேன்.

இதேநேரம் கடந்தகாலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தியதாகவே செயற்படுத்தியிருந்தார்.

ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் இல்லாமல் செய்யும் போக்கிலேயே சக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றன. இதனால் தான் எமது மக்களின் தேவைகளும் பிரதேசத்டதின் அபிவிருத்தியும் மட்டுமல்லாது அரசியல் தீர்வகளும் கைநழுவிப் போயிருந்தன.

இதேநேரம் எமது அரசியல் செயற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கும் பொறிமுறைகளையும் நாம் வெளிப்படையாகவே கூறுகின்றோம். இதை மக்கள் ஏற்று இம்முறை அணிதிரண்டு எமது சின்னமான வீணைக்கு வாக்களித்து எம்மை அரசியல் பலம் மிக்கவர்களாக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது மத்தியில் ஏற்பட்டதைப் போன்று தமிழ் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை கொண்டுவர தமிழ் மக்கள் முயற்சிக்கின்றனர் 

அந்த மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாக இருக்கின்றது. அந்த மாற்றத்தினூடாக எதிர்கரும் கார்த்திகை 14 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் அணி திரண்டு வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து எம்மை அரசியல் ரீதியில் பலம் மிக்கவர்களாக்க வேண்டும் என்பதே  எமது கட்சியின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

குறிப்பாக சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் மக்கள் இனங்காணும் தேர்தல் இது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்றும் அந்த மாற்றம் ஈ.பி.டி.பிக்கு கிடைக்கும் பட்சத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும் என மேலும் தெரிவித்தார்.

No comments