Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 29

Pages

Breaking News

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அலுவலகம் திறப்பு


தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் சாவகச்சேரி பகுதியில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

பிரதம விருந்தினருடன் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களும் மேள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன்,மற்றும் முன்னாள் மருத்துவ நிர்வாக அதிகாரி எஸ்.சிறீ.பவனந்தராஜா,அதிபர் ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன்,தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி மகளீர் அணி அமைப்பாளர் வெண்ணிலா இராசலிங்கம்,ஆசிரியர் காரளசிங்கம் பிரகாஸ்,மென்பொருள் பொறியாளர் உதயகுமார் கீர்த்தி ஆகிய வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.