யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வெறும் 2 வருடங்களில்4.5 பில்லியன் ரூபாய்களை அபிவிருத்திக்காக கொண்டுவந்தேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை தொகுதியில் அராலி, சங்கரத்தை, சங்கானை, சுழிபுரம், மூளாய், மற்றும் தொல்புரம் கிராமங்களில் மக்கள் சந்திப்புகள் இடம்பெற்றன.
குறித்த மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இதுவரைகாலமும் தேர்தலுக்கு பின்னர் மக்களை சந்திக்காதவர்களால் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் எந்தவித பிரயோசனமும் கிடைக்கவில்லை.
நான் உங்களை அடிக்கடி சந்தித்து உங்களதும் கிராமங்களினதும் தேவைகளை நிறைவேற்றியுள்ளேன்.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வெறும் 2 வருடங்களில் 4.5 பில்லியன் ரூபாய்களை அபிவிருத்திக்காக கொண்டுவந்தேன். இதை ஏன் ஏனையோரால் செய்ய முடியவில்லை? இந்த கேள்வியை உங்களிடம் வரும் அனைத்து வேட்பாளரிடமும் கேளுங்கள்.
அதிலிருந்து தெளிவை பெறுங்கள். உங்களை அடிக்கடி தேடி வந்த என்னை தெரிவு செய்தால் நான் தொடர்ந்தும் உங்களோடு இருப்பேன். ஊருக்கும் நல்லது நடக்கும் என மேலும் தெரிவித்தார்.