Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். இலட்ச ரூபாய்க்களை தீக்கிரையாக்கிவர் கைது


யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நபர் ஒருவர் இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் ஒரு தொகை பணத்தினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார். 

குறித்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார். 

பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளையும் , கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ மூட்டியுள்ளார். 

அதனை அவதானித்த அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் பணமும் தீயில் எரிந்துள்ளது. 

மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்திற்கு தீ மூட்டிய நபரின் மனைவி சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது 

No comments