Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர் எதிர்ப்பு!


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் வீதியோரமாக மலைவேம்பு மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் உள்ள கொப்புக்களால் ஆபத்து என தெரிவித்து மரக் கூட்டுத்தாபனம் நேற்றையதினம் திங்கட்கிழமை  மரத்தின் கொப்புகளை வெட்டியுள்ளது.

அத்துடன் கொப்புகளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் மரத்தையே அடியோடு வெட்டுவதற்கும்ம் நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த மரமானது பல்லாண்டு காலமாக பாடசாலைகளாகத்தில் நிற்கின்றது. மரத்தின் கொப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் குறித்த கொப்புகளை வெட்டலாம் ஆனால் மரத்தினை வெட்ட வேண்டிய தேவை இல்லை.

பயணிகளது நன்மை கருதி வீதிகளில் உள்ள மரங்களையே வெட்டாமல் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன.  இவ்வாறான சூழ்நிலையில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் பாடசாலை வளாகத்திற்குள் நிற்கின்ற மரத்தை வெட்டுவதற்கான தேவை என்ன? 

பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் இந்த மரநிழலில் நிற்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. 

எனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதிக்கான கிராம சேவகர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர், மரக் கூட்டுத்தாபனம் ஆகியன அதிக கவனம் செலுத்தி, இந்த மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

No comments