Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சவால் விட்டுள்ள அங்கஜன்


யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக 2020- 2024 காலத்தில் 4.5 பில்லியன் ரூபாய்களை அரசிடமிருந்து என்னால் கொண்டுவர முடிந்தது என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

யாழ் . தேர்தல் தொகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக 2020- 2024 காலத்தில் 4.5 பில்லியன் ரூபாய்களை அரசிடமிருந்து என்னால் கொண்டுவர முடிந்தது. அவை எங்கே எப்படி பயன்பட்டது, பயன்பெற்றவர்கள் விபரங்கள் அனைத்தையும் என்னால் மக்களிடம் முன்வைக்கமுடியும். 

என்னை விட 1 ரூபாய் அதிகமாக கடந்த 4 வருடத்தில் யாழ் மாவட்ட மக்களுக்காக ஒரு அரசியல்வாதி கொண்டுவந்திருந்திருக்க மாட்டார்கள் என நான் சவால் விடுகிறேன். அதேபோல ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் கடந்த 4 வருடத்தில் சொன்னதில் செய்ததை மக்களிடம் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.   

No comments