Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்த ஈ.பி .டி.பி கொழும்பில் போட்டி


தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால்,  இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா    தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.  

 வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

''வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது 

கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்திவந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகிறோம் 

இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்ப காலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர்.

அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

No comments