Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆறுகால்மடத்தடி குருசுமதவடி வடிகால் துப்பரவு பணியில் இளையோர்


யாழ்ப்பாணம் - ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி  வடிகால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களால் இன்றையதினம் புதன்கிழமை துப்பரவு செய்யப்பட்டது.

ஏலோன் ஓபீசியல் கிளப் போய்ஸ் ( Alone offical club boys) கழக இளைஞர்களின் முயற்சியால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மழைநீர் தேங்கி நிற்பதனால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் மற்றும் சுகாதார பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடாக இந்நடவடிக்கை இடம்பெற்றது.

குருசுமதவடி  வடிகாலின் நிலைமை தொடர்பாக அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான  மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  நேரடியாக பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments