உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று தினங்களுக்கு உயர் தரப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டு இருந்த நிலையில் , தற்போது எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் கூறினார்.
No comments