Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெள்ளத்தினால் யாழ் . பல்கலை மாணவர்கள் பாதிப்பு


வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார். 

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலைக்கழகத்தில், கடந்த 03 தினங்களாக இடம்பெறவிருந்த பரீட்சைகள் யாவும் கலைப்பீடாதிபயினால் பிற்போடபட்டுள்ளது. 

அதேவேளை பல்கலைக்கழகத்தில் போதிய விடுதி வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பல்கலைக்கழக சூழலை அண்டிய பகுதிகளில் வாடகை கொடுத்து விடுதிகளில் தங்கி கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. அதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் எம்மால் இயன்றளவு உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம். 

இந்த சாவாலில் இருந்து நாங்கள் மீண்டு வந்து கொண்டுள்ளோம் . கலைப்பீட மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் 1020 மாணவர்களுக்கு உணவினை வழங்கியுள்ளோம். தொடர்ந்தும்  உணவுகளையும் வழங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

No comments