Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!


முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பிரதம வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஹரின் பெனாண்டோ, தேர்தல் பிரசார இறுதி தினமான கடந்த நவம்பர் 11ஆம் திகதி, தனது ஆதரவாளர்களுடன் பட்டாசு கொளுத்தியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பதுளை நகரத்தின் ஊடாக பேரணியாக பயணித்திருந்தனர்.

இவ்வேளையில், பதுளை பஹல வீதியில் ஊர்வலத்தை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதன் போது, முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, ஹரின் பெனாண்டோ தாம் அணிந்திருந்த தனது விருப்பு வாக்கு இலக்கம் கொண்ட ரி-சேர்ட்டை கழற்றிக் கொடுத்து விட்டு சென்றிருந்தார். 

இந்நிலையில், இன்றையதினம் புதன்கிழமை குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டிருந்த ஹரின் பெர்னாண்டோ, பதுளை பொலிஸ் நிலையத்தின் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தான் சிறையில் அடைக்கப்படுவேன் எனத் தெரிந்து சில ஆடைகளுடன் பொலிஸ் நிலையம் வந்ததாக ஹரின் பெனாண்டோ இதன் போது தெரிவித்தார்

No comments