Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது


மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் சனிக்கிழமை சென்றிருந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

நான் மக்கள் நலனில் இருந்தே செயற்பட்டு வருகின்றேன். ஆனால் அன்று எமது தமிழ் அரசியல் முன்னோர்கள் சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைத்து மேடைகளில் முழங்கி தேர்தல் வெற்றிகளை பெற்று நாடாளுமன்றை அலங்கரித்தினர். 

ஆனால் அவர்கள் தாம் முன்வைத்த விடயத்த்தின் இலக்கை அடையச் செய்வதற்கான பொறிமுறையை துளியளவும் கொண்டிருக்கவில்லை. அதேபோன்றுதான் அவர்கள் வழி வந்து போலித் தேசியம் பேசும் இன்றைய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் கூறிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் பொறிமுறையற்றதாக இருக்கின்றது.

நான் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரை போன்று நாடாளுமன்றை அலங்கரிக்க 23 ஆசனங்களை கேட்கவில்லை. குறைந்தது 4 முதல் 5 ஆசனங்களையே எனக்க தாருங்கள் என கோருகின்றேன்

அதுமட்டுமல்லாது நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல, தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். எனது மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது

அதுமட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை வலுவானது. நடைமுறை சாத்தியமான வழிநடத்தல் எமது கொள்கை இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலுவாக்கப்பட்டுவிட்டது.

இதேநேரம் நான் அரசியல் பயத்தால் அல்லது தோற்கடிக்கப்பட்டு விடுவேன் என்ற பயத்தால் ஒருபோதும் ஒதுங்கவும் போவதில்லை.

எமது கொள்கையின் மீது எமக்கிருக்கின்ற பற்றே, எமது கொள்கை மீது எமது அதீத நம்பிக்கைக்கு காரணம். எமது இந்த வலுவான கொள்கையை இன்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் எமது கருத்துக்கள் ஒருசிலரது சுயநலன்களுக்காக திட்டமிட்டு சேறுபூசல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதேநேரம் நாம் கூறிய பாதையும் வழிமுறையும் தான் சரியானது என்று இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். 

அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அந்த வகையில் கார்த்திகை 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி கொடுப்பீர்கள் என நம்புவதுடன் அதனூடாக எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார். 

No comments