மன்னார் நீதிமன்ற சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதிக்கு உணவு கையளிக்க சென்ற உறவினரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதனை அடுத்து, குறித்த சந்தேகநபரை மன்றின் தடுப்பு காவலில் மறித்து வைத்திருந்த வேளை சந்தேக நபருக்கு உணவு மற்றும் தண்ணீர் போத்தல் வழங்க சென்ற உறவினரிடம் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் லஞ்சம் வாங்கியுள்ளார்.
லஞ்சம் வாங்கியதை குறித்த உறவினர் பொலிஸரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, உடனடியாக பாதிக்கப்பட்டவரிடம் முறைப்பாட்டை பெற்ற பொலிஸார், லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தரை கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து , சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
No comments