சமஸ்டி முறையான தீர்வே எமது தீர்வாகும். அதனூடாகவே தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியின் யாழ் - கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட தலைமை காரியாலயம் பலாலி வீதி கந்தர்மட பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை முதன்மை வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் மற்றும் சக வேட்பாளர்களால் திறந்து வைக்கப்பட்டது.
காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களிடையே பிரபல்யமான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியே. அதன் சின்னமாக இப்பவும் யானை சின்னமே உள்ளது. அதனால் யானை சின்னத்தில் நாம் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க இரண்டு வருடங்களில் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியவர்.
கடற்தொழில், விவசாயம் , கல்வி போன்றவற்றை மேம்படுத்துவோம். இனப்பிரச்சனைக்கு தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமா செயற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியே.
சமஸ்டி முறையான தீர்வே எமது தீர்வாகும். அதனூடாகவே தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என மேலும் தெரிவித்தார்.
No comments