Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

18 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு


அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால உள்ளிட்ட அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  லக்மினி கிரிஹாகம, மாளிகாகந்த நீதிமன்றில் கோரியதையடுத்து, அதற்கு அனுமதியளித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

No comments