தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் செயற்படுவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நாவாந்துறை பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
9 பாராளுமன்ற ஆசனங்களாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது 6 ஆசனங்களாக குறைந்து இருக்கிறது. அதற்கான பிரதான காரணம் வாக்களர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை.
கிராமங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
No comments