Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

UCMAS உலக போட்டியில் அதிக சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்


இந்தியாவின் புதுடெல்லியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சாம்பியன் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

உலக நாடுகளில் இருந்து  1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் இலங்கையில் பல பாகங்களில் இருந்து 103 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பல்வேறுபட்ட பிரிவுகளை சேர்ந்த 16 மாணவர்கள் சர்வதேச சம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி centre இருந்து 21 மாணவர்கள் கலந்து கொண்டு மூன்று சம்பியன்களும் யாழ்ப்பாண கிளையில் இருந்து 6 பேர் கலந்து கொண்டு நான்கு மாணவர்கள் சாம்பியன் ஆகியுள்ளனர்.

அதேவேளை வெள்ளவத்தை கிளை , திகாரியா கிளை மற்றும் குளியாப்பிட்டியா கிளைகளில் இருந்து சென்றவர்களில் தலா இருவரும் மட்டக்களப்பு கிளை மற்றும் களனியா கிளையில் இருந்து சென்றவர்களில் தலா ஒருவரும் சாம்பியனாக தெரிவாகியுள்ளனர். 

BRAINWAVE ACADEMY யின் மூலம் UCMAS, Robotics, English Speaking பாட நெறிகளை நடாத்தி வருகின்ற ஆசிரியர் தயானா.சந்துரு வின் வழிகாட்டலில் ஆரம்பித்த மிக குறுகிய காலத்தில் National, International ரீதியாக UCMAS யாழ்ப்பாண கிளை நிறுவனம் சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது  

No comments