யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் களவு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்று கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த, 19 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று , யாழ்ப்பாணம் , வவுனியா கண்டி , கலஹா நுவரெலியா , கந்தபொல ஆகிய பகுதிகளில் வீடுகள் , ஆலயங்கள் , வியாபார நிலையங்கள் என்பற்றில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கம்பளை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருட காலமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று , அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை குறித்த கும்பலுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் , அதில் 09 வழக்கு விசாரணைகளுக்கு அவர்கள் சமூகமளிக்காத நிலையில் 09 பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
No comments