Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இ.போ.ச வின் 1,500 பேருந்து பயணங்கள் ரத்து!


இயற்கை அனர்த்த நிலைமை காரணமாகவும், வீதித் தடைகள் காரணமாகவும்  இலங்கை   போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

பேருந்துகளில் பயணிப்பதற்காக 15,000 பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்துள்ளதாக, போக்குவரத்து சபையின் ஆசன முன்பதிவு சேவையை மேற்கொள்ளும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

 எனினும், அவர்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்காக, தமக்கு விரும்பிய வேறொரு தினத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாக ஆசன முன்பதிவு சேவையை நடத்தும் என அந்த நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி விமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார். 

1315 அல்லது 070 3110 506 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு வேறொரு வசதியான தினத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும், இதற்காக எவ்வித மேலதிகக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். 

No comments