Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். சட்டவிரோத மணல் கடத்தல் - துரத்தி பிடித்த பொலிஸார்


அனுமதியின்றி மணலை கடத்தி சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை பொலிஸார் வீதியில் துரத்தி சென்று கைப்பற்றியதுடன் , அதன் சாரதிகளையும் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலையில் , பயணித்த மூன்று டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது , பொலிசாரின் கட்டளையை மீறி டிப்பர் வாகனங்கள் பயணித்துள்ளன. 

அதனால் பொலிஸார் அவற்றை துரத்தி சென்ற வேளை பின்னால் சென்ற டிப்பர் வாகனம் மணலை வீதியில் கொட்டி , பொலிஸார் தம்மை பின்தொடராத வகையில் வாகனத்தினை செலுத்தியுள்ளனர். 

இருந்த போதிலும் பொலிஸார் அவற்றை துரத்தி சென்று மூன்று வாகனங்களையும் மடக்கி பிடித்து அவற்றை கைப்பற்றியதுடன் , வாகன சாரதிகளையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சாரதிகளும் , டிப்பர் வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 







No comments