Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் வீதியோரமாக இருந்தவர்களை மோதிய பேருந்து - தந்தை உயிரிழப்பு ; மகன் படுகாயம்


யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவரை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பெரியவிளான் பகுதியை சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (வயது 76) என்பவரே உயிரிழந்துள்ளார். 

பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தவரும் , அவரது மகனும் வீதியோரமாக இருந்துள்ளனர். 

அவ்வேளை வீதியில் பயணித்த பேருந்து இருவரையும் மோதியுள்ளது. அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , தந்தை உயிரிழந்துள்ளார். மகன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

விபத்தினை அடுத்து , பேருந்து சாரதி பேருந்தை விபத்து நடைபெற்ற இடத்தில் கைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



No comments