Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இனவாதத்தை பயன்படுத்த இடமளியோம்!


இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. 

இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் சில இடங்களில் பதிவாகியுள்ளதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தற்போதுள்ள சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாறுவதற்கு இடமளிக்காமல் இந்த தருணத்தில் அது முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து, அதற்குப் பதிலாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான, குடிமக்களுக்கு பொறுப்புக்கூறும்  வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வரத் தயார்.

ஆனால் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டவுடன் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றும், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்து தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்ற தயாராக இருப்பவர்களுக்கு இடமளிப்பதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார் 

No comments