Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு நம் இதயங்களையும் கைகளையும் நீட்டுவோம்.


புத்தாண்டை நெருங்கி வரும் இவ் வேளையில், எமது தேசத்துக்கு, அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் 

செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடுகையில், 

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்தப் பாலன் பிறப்பை நாம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகையில் கிறிஸ்துமஸின் உண்மையான உணர்வை நினைவில் கொள்வோம். 

அன்பை - கருணையைப் பரப்புதல், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுதல், மற்றவர்களுக்கு இரங்குதல் - உதவி செய்தல் மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்கத்தை வளர்ப்பது என்ற எண்ணங்களை மனதிலிருத்துவோம்.  

இந்த மகிழ்ச்சியான பண்டிகையை நாம் கொண்டாடும்போது, எம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு நம் இதயங்களையும் கைகளையும் நீட்டுவோம்.

புத்தாண்டை நெருங்கி வரும் இவ் வேளையில், வடக்கு மாகாணத்துக்கும் எமது தேசத்துக்கும், அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

கிறிஸ்துமஸின் ஒளி நம் பாதைகளை வழிநடத்தட்டும், மேலும் இந்தப் பண்டிகையின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் கொண்டு வரட்டும் என செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  

No comments